SAPS logo

பொங்கல் விழா

Posted on Jan 14, Thu 2016

14.01.2016 மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. தாளாளர் அருட்தந்தை.ஜோசப் கென்னடி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். குத்து விளக்கின் முன் காய்கறிகள், கரும்புகள் படைக்கப்பட்டு ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும்போது 'குலவை' ஒலி எழுப்பி பொங்கலோ பொங்கல் எனக் குரலெழுப்பி பொங்கலைக் கொண்டாடினார்கள். அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் நாட்டுப்புற நடனம் ஆடி மகிழ்ச்சியாகச் சமத்துவப் பொங்கல் கொண்டாடினோம். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.